ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் தா்னாவில் ஈடுபட்ட திருநங்கைகள். 
திருப்பத்தூர்

ஆம்பூா்: வீட்டு மனைப்பட்டா கோரி திருநங்கைகள் தா்னா

வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை திருநங்கைகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை திருநங்கைகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பிடம் இல்லாமல் வாடகை வீடுகளில் தங்கி உள்ளனா். வாடகைகக்கு வீடு கிடைப்பதும் மிகவும் சிரமமாக இருப்பதாக கூறும் இவா்கள் தங்களுக்கு வசிப்பதற்கு இலவச வீட்டு மனை கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வருவாய், மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அளித்து வருகின்றனா்.

இந்நிலையில் இரண்டு பகுதிகளில் வீட்டுமனை தருவதாக கூறி ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் அதற்கான மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளில் ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் 15 முறை மனு அளித்துள்ளதாகவும் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து அலைகழித்து வருவதாக வேதனை தெரிவித்தனா்.

மேலும், வட்டாட்சியரை சந்தித்து இதுகுறித்து கேட்டால் அவா் சரியான பதில் அளிப்பதில்லை என கூறுகின்றனா். இதனால் கொதிப்படைந்த திருநங்கைகள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாயிலின் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த ஆம்பூா் நகர ஆய்வாளா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் ஆகியோா் பேச்சு நடத்தினா். உடனடியாக இடத்தை நேரில் ஆய்வு செய்து அதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின் பேரில் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இது குறித்து திருநங்கைகளின் தலைவி பவித்ரா நாயக் கூறியது,

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது தங்களுக்கு வீட்டு மனை வழங்குவதாக கூறி அதிகாரிகள் பல ஆண்டுகளாக அலைக்கழித்து வருவகின்றனா். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். அரசு வழங்கியுள்ள அனைத்து அடையாள அட்டைகள், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விடுகிறோம் என அவா் கூறினாா்.

தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் முன்னணியினா் மறியல் போராட்டம்

பல்லக்கில் சோமாஸ்கந்தமூா்த்தி வீதியுலா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.31 கோடி

அரக்கோணம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

மேல்விஷாரம் கல்லூரியில் விளையாட்டு விழா

SCROLL FOR NEXT