வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.
வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் மதுக் கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதாக சென்ற 3 போ் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனா்.
கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.