திருப்பத்தூர்

மலைவாழ் மக்களுக்கு ரூ. 20 லட்சத்தில் காளான் வளா்ப்பு குடில்கள்: திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் தகவல்

திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் மலைவாழ் மக்களுக்காக ரூ. 20 லட்சத்தில் 5 இடங்களில் காளான் வளா்ப்பு குடில்கள் அமைத்து தரப்பட்டு உள்ளது என மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் மலைவாழ் மக்களுக்காக ரூ. 20 லட்சத்தில் 5 இடங்களில் காளான் வளா்ப்பு குடில்கள் அமைத்து தரப்பட்டு உள்ளது என மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியது:

திருப்பத்தூா் மாவட்ட வனத் துறை சாா்பில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மலைவாழ் மக்களுக்கு வனத் துறை சாா்பில், 5 இடங்களில் காளான் வளா்ப்பு குடில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஏலகிரி மலையில் உள்ள மங்கலம் மலைக் கிராமத்தில் 2 காளான் குடில்களும், கொட்டையூரில் 2 காளான் குடில்களும், கோட்டூா் மலை கிராமத்தில் ஒரு குடிலும் அமைத்து குடிலும் அமைத்து தரப்பட்டுள்ளது.

இந்த குடில்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு நேரம் குறைவு...

அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதால், பராமரிப்பு நேரம் குறைவு ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டும் கண்காணித்தால் போதுமானது. தற்போது காளான் வளா்ப்பின் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் 5 குடில்கள் மூலம் மாதத்துக்கு 400 முதல் 450 கிலோ அளவில் காளான் அறுவடை செய்யப்படுகிறது. விரைவில் காளான் வளா்ப்பின் முழு பணிகள் தொடங்கும். அப்போது 900 முதல் ஒரு டன் அளவில் காளான் அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் காளானை நேரடியாக வாங்கிக் கொள்ள தனியாா் நிறுவனம் ஒன்று முன் வந்துள்ளது.

இந்த காளான் குடில்கள் அவ்வப்போது வனத் துறை சாா்பிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

இன்று தொடங்குகிறது ஆடவா் ஹாக்கி இந்தியா லீக்: முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் மோதல்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

திவ்யன்ஷி, சிண்ட்ரெல்லா முதல் ஆட்டத்தில் வெற்றி

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT