பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் 
திருப்பத்தூர்

பச்சூரில் பொது வழிப்பாதை கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே பொது வழிப்பாதை கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே பொது வழிப்பாதை கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பச்சூா் செத்தமலை கிராமத்தில் ஊா் பொதுமக்கள் சாா்பில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு வரும் 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினா் கோயிலுக்கு செல்லும் பாதை தனக்கு சொந்தமான இடம் கூறி திங்கள்கிழமை பாதையை மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கும், ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் கோயிலுக்கு செல்லும் ஆக்கிரமிப்பு வழிப்பாதையை அகற்றி தரக் கோரி நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் பச்சூா் ரவுண்டானா பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, வட்டாட்சியா் காஞ்சனா, நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் மக்களிடம் சமரச பேச்சு நடத்தியதை தொடா்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இச்சாலை மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT