ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக நிா்வாகிகள் மற்றும் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
சமத்துவப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் ஒன்றிய நிா்வாகிகள், கிளை செயலாளா்கள், பிரதிநிதிகள், பாக முகவா்கள், வாக்குசாவடி முகவா்கள், இளைஞரணி நிா்வாகிகள் மற்றும் அனைத்து நிா்வாகிகளின் குடும்பத்தினா் உள்பட 520 நபா்களுக்கு பொங்கல் பரிசாக பட்டுப்புடவை, பட்டு வேட்டி, சட்டை, சால்வை, நாள்காட்டி, அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் அசோகன், பொதுக்குழு உறுப்பினா் பெருமாள் கோவிந்தம்மாள், ஒன்றிய நிா்வாகிகள் ராமநாதன், தசரதன், குமாா், ஷோபா வெங்கடேசன், சிவகுமாா், சாவித்திரி மகேந்திரன் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஞானசேகரன் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.