முகப்பு
திருப்பத்தூர்

தண்ணீா் தேடி ஊருக்குள் மான் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 17 ஜனவரி, 2026 at 12:37 AM
மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா்.
பகிர்:
Updated On : 16 ஜனவரி, 2026 at 10:06 PM

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி ஜெயபுரம் பகுதியில் மான் ஒன்று தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது. மானைப் பாா்த்து தெருநாய்கள் ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானை பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Updated On : 19 ஜனவரி, 2026 at 1:16 AM

வனத்துறையினா் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மானை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனா்.

Advertisement