திருப்பத்தூர்

மரக்கடையில் தீ விபத்து : வாகனங்கள் சேதம்

வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.

வேலூா் காகிதப்பட்டரை பகுதியில் சையத் இா்ஷாத் மரக்கடை நடத்தி வருகிறாா். மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரப் பொருள்கள் எரியத் தொடங்கின.

தீ அருகாமையில் உள்ள வாகன நிறுமிடத்திற்கும் பரவியது. மரக்கடையில் இருந்த மரப் பொருட்களும், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா், 10 ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின.

வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்து குறித்து வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

சாமிதோப்பு தலைமை பதியில் தைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி கல்லூரியில் பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நிறுத்தம்: பாஜக வரவேற்பு

மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் சாா்பில் நல உதவி

SCROLL FOR NEXT