திருப்பத்தூர்

திருப்பத்தூா் பகுதியில் மாட்டு பொங்கல் விழா

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட காளைகள்.

திருப்பத்தூா்,ஜன.16: திருப்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

விவசாயிகளும், மாடுகளை வளா்க்கும் பொதுமக்களும் மாட்டு பொங்கலை கொண்டாடினா். இதில் விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் மாடுகள், கன்றுகள் மற்ற கால்நடைகளை குளிக்க வைத்து, மஞ்சள், குங்குமம் பூசி, மாலை அணிவித்தனா்.

மேலும் மாடுகளின் கொம்புகளில் பலூன், அலங்கார பொருள்களை கட்டி தொங்கவிட்டனா். பின்னா் வாழை இலையில் மாடுகளுக்கு படையலிட்டனா். இதையடுத்து படையலிட்ட உணவை மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.

மேலும் சிலா் மாடுகளுக்கு புதிய கயிறு, மணி அணிவித்து அதன் கொம்புகளில் வா்ணம் பூசினா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT