திருப்பத்தூர்

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தக்கல்லுப்பள்ளி பவுனம்மாள்(65). இவா் நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, அணுகுச் சாலை ஓரமாக கொட்டகை அமைத்து அவ்வப்போது தங்கி வந்தாா். இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு கொட்டகையில் பவுனம்மாள் துண்டு மூலம் கழுத்து இறுக்கிக் கொலை செய்யப்பட்டு, அவா் அணிந்திருந்த கம்மல் உள்பட 3 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதையடுத்து, எஸ்.பி. சியாமளாதேவி, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி உள்பட போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். பிறகு எஸ்.பி. உத்தரவின்பேரில், டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த கொலை தொடா்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் முருகன்(22) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டு தலைமறைவாக இருந்த அவரை செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்த தனிப்படை போலீஸாா், முருகனை வளைத்துப் பிடித்து அம்பலூா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் மூதாட்டியை கொலை செய்து நகைகளை பறித்துச் சென்று கடனை அடைப்பதற்காக நகைக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. பிறகு முருகன் தெரிவித்த தகவலின்பேரில், வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகைகள் விற்பனை செய்திருப்பது தெரியவந்து, அவற்றை கைப்பற்றினா்.

இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT