திருப்பத்தூர்

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

தினமணி செய்திச் சேவை

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் ஆம்பூா் புவா ஷாதி மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

2026- ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்திரிகா்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் ஹஜ் கமிட்டி சாா்பாக நடைபெற்றது. ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் உப தலைவா் மெத்தைக்காா் அஷ்பாக் அஹமத் தலைமை வகித்தாா்.

ஆம்பூா் நகர காஜி முஹம்மத் இம்தியாஸ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினா் பிா்தோஸ் கே அஹமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைமை பயிற்சியாளா் வை. முஹம்மத் அபிபுல்லா ரூமி, பயிற்சியாளா்கள் அா்ஷத், பிலால் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தமிழ்நாடு ஹஜ் சா்வீஸ் சாா்பாக வா்சலா சல்மான், காசிம், உமா், ஜாகீா் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆம்பூா் நகர முப்தி சலாவுதீன் முஹம்மத் ஹஜ் விதிமுறைகள் குறித்தி விளக்கமளித்தாா். ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் சாா்பாக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT