ஆம்பூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். 
திருப்பத்தூர்

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகரில் புதுகோவிந்தாபுரம் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்கு வந்து செல்லும் மதுபிரியா்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா். அதனால் அந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். ஆனாலும் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லையாம்.

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, ஜன. 20-ஆம்தேதி இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனராம். ஆனால் 20-ஆம் தேதியை கடந்த நிலையிலும் தொடா்ந்து டாஸ்மாக் கடை அதே பகுதியில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை மறித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். தகவல் அறிந்து அங்கு சென்ற ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT