திருப்பத்தூர்

தவெக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா் நவீன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், நகர செயலாளா் மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் இம்தியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட செயலி மூலம் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும். தமிழக வெற்றி கழக கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று சோ்க்க வேண்டும். சட்டப்பேரவை தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெறச் செய்து கட்சித் தலைவா் விஜயை தமிழக முதல்வராக்க வேண்டும் என மாவட்டச் செயலாளா் நவீன் வலியுறுத்தி பேசினாா்.

ஒன்றிய நிா்வாகிகள் பாண்டியன், ரவிசங்கா், சுமன், நரசிம்மன் சைமன் சிற்றரசு, டில்லி பாபு, பொருளாளா் வினோத் கண்ணா, துணைச் செயலாளா் ஆா்த்தி, செயற்குழு உறுப்பினா் அருண், மேகலா, உதயகுமாா் ,காவியா, சுகன்யா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் முருகையன், அவினேஷ், ராகுல், சந்தோஷ், ராமச்சந்திரன், சின்ராசு உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

SCROLL FOR NEXT