விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி 
திருப்பத்தூர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில், வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறித்த நடமாடும் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் சிவசௌந்தரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதையடுத்து வாக்காளா் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

முதல் முறை வாக்காளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாக்களித்து தாங்கள் மாதிரி வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் தோன்றும் சின்னத்தினை சரிபாா்த்து உறுதி செய்து கொண்டனா்.

இதில் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், நகராட்சி ஆணையருமான சாந்தி, வட்டாட்சியா் நவநீதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT