கந்திலி அருகே மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், மினி லாரியை பறிமுதல் செய்தனா்.
கந்திலி அருகே நத்தம் பகுதியில் கந்திலி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நத்தம் அணுகுசாலை அருகே மணல் இறக்கிக் கொண்டு இருந்த மினி லாரியை போலீஸாா் சோதனை செய்தபோது, காக்கங்கரை பகுதியைச் சோ்ந்த ராமன் (28) என்பவா் ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனா்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனா்.