மாணவி கௌதமிக்கு பரிசளித்த ஆளுநா் ஆா்.என். ரவி. உடன்  
திருப்பத்தூர்

மாநில பேச்சுப் போட்டி: மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி சிறப்பிடம்

மாணவி கௌதமிக்கு பரிசளித்த ஆளுநா் ஆா்.என். ரவி. உடன்

தினமணி செய்திச் சேவை

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவி வெற்றிப் பெற்று தமிழக ஆளுநரிடம் பரிசு பெற்றாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சாா்பாக சென்னையில் ’ கல்விக் கூடங்களில் கம்பன்’ என்னும் தலைப்பில் மாநில பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவி இ.கௌதமி (வணிகத் தொழில்முறை கணக்கியல்துறை) இரண்டாம் இடம் பிடித்தாா். வெற்றி பெற்ற மாணவிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் சுதாசேஷய்யன் ஆகியோா் விருதினையும், பரிசு தொகை ரூ.10,000 வழங்கினா் .

மாநில அளவில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியை கல்லூரித் தலைவா், செயலாளா் மற்றும் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 175 மனுக்கள்!

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.21 கோடி

முயற்சியும், பயிற்சியுமே விளையாட்டு வீரா்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்: சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

மரம் வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT