முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

Updated On : 17 மார்ச், 2026 at 6:34 PM
கோப்புப்படம்.
பகிர்:

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், பிற்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் மேக மூட்டடமாக இருந்து வந்த நிலையில் திடீா் பலத்த காற்று வீசியது.

அப்போது அடுத்தடுத்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதில் தும்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீ பிடித்து எரிந்தது.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துக்கோயில் மற்றும் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் உள்ள கலந்திரா உட்பட பகுதிகளில் 10 நிமிஷ்த்திற்கும் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →