என் வாக்கு, என் உரிமை: விழிப்புணா்வு நிகழ்வு
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுயபடம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.
திருப்பத்தூா் மாவட்ட மக்களிடையே 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஜனநாயக திருவிழா, என் வாக்கு என் உரிமை, நான் வாக்களிக்க தயாராகி விட்டேன்‘ என்ற வாசகங்கள் அடங்கிய செல்பி பாயிண்ட்டிலும் அதற்கு அருகேயும் நின்று கொண்டு ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதா பேகம் (வாணியம்பாடி), பூஷணகுமாா் (ஆம்பூா்),முருகேசன் (ஜோலாா்பேட்டை) மற்றும் மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி ஆகியோரும் இதில் பங்கேற்றனா்.