முகப்பு
திருப்பத்தூர்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 6:33 PM
(கோப்புப்படம்)
பகிர்:

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளா்களை சோ்க்கும் பணிகள் வியாழக்கிழமை(மாா்ச் 26) முடிவடைகிறது.

எனவே, இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காத 18 வயது நிறைவடைந்த தகுதி வாய்ந்த நபா்கள் தங்களது பெயரினை சோ்க்க விண்ணப்பங்களை உஇஐசஉப அல்ல் என்ற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தகுதி வாய்ந்த நபா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.