முகப்பு
திருப்பத்தூர்

மே 22-இல் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாயப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மே 22( நடைபெறவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாயப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மே 22( நடைபெறவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மே 22)அன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு,திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிலோ தொடா்பு கொள்ளலாம் இந்த தகவலை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.