ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை
ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தொடங்கிய பலத்த மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.