மூடியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள்
பொன்னேரி, மார்ச் 9 : அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாகச் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிராமங
திருவள்ளூர்மூடியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள்
பொன்னேரி, மார்ச் 9 : அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாகச் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிராமங
பொன்னேரி, மார்ச் 9 : அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாகச் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கல்வி அறிவை வளர்க்கும் உயரிய நோக்கில் அமைக்கப்படும் இந்நூலகங்கள் பெரும்பாலனவை மூடப்பட்ட நிலையிலேயே கிடக்கின்றன.
கிராம ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கான ரூ.20 லட்சத்தில் ரூ.3 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்டப்படுகிறது. இந்நூலகத்துக்கு விலை உயர்ந்த புத்தகங்கள் மற்றும் நூலகத்துக்கு தேவையான மேஜை நாற்காலிகளை அரசு வழங்குகிறது. மேலும், இந்நூலகங்களுக்கு மாதம் ரூ.750 சம்பளத்தில் ஒய்வுபெற்ற ஆசிரியர்களைத் தேர்வு செய்து பொறுப்பாளர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 56 ஊராட்சிகளும், சோழவரம் ஒனறியத்தில் 39 ஊராட்சிகளும் அமைந்துள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலன நூலகங்கள் திறக்கப்படாமல் உள்ளனவாம்.
திறக்கப்பட்டுள்ள நூலகங்கள் சிலவற்றுக்கு நூலகப் பொறுப்பாளர் யாரும் நியமிக்கப்படவில்லையாம். ரூ.750 சம்பளத்திற்கு நூலகங்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் யாரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட இரண்டு ஒன்றியங்களிலும் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பெரும்பாலன நூலகங்கள் திறக்கப்படாமலே உள்ளன.
அரசு பணம் வீண்: ஏற்கெனவே பொது நூலகத்துறை மூலம் ஊர்ப்புற நூலகங்கள் உள்ள கிராமங்களில் அரசு பணம் வீணாக்கப்பட்டு அங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சோழவரம் ஒன்றியம், ஆத்தூர் கிராமத்தில் பொது நூலகத்துறை மூலம் ஊர்ப்புற நூலகம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் கட்டப்புள்ள நூலகம் என இரண்டு நூலகங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக அரசு பணம் பொதுமக்களுக்கு எந்த பயனுமின்றி வீணடிக்கப்படுகிறது. இதுகுறித்து பொது நூலகத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: ""இதே போன்று 1996-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடங்கப்பட்ட அய்யன் திருவள்ளூவர் நூலகம் அதற்கடுத்த 5ஆண்டுகளுக்குள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போனது. தற்போது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் கட்டப்படும் நூலகங்கள் பொது நூலகத் துறை அமைத்துள்ள ஊர்ப்புற நூலகங்கள் உள்ள கிராமங்களிலும் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு பணம் பல லட்சம் வீணாவதுடன் ஒரே கிராமத்தில் இரண்டு நூலகங்கள் அமைவது தேவையில்லாத ஒன்று.
÷அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் நடைபெறும் இந்த நூலகங்கள் அமைக்கும் தொகையை பொது நூலகத் துறையிடம் வழங்கினால், ஊர்ப்புற நூலகங்கள் இல்லாத கிராமங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் நூலகங்களை அமைத்தால் அது மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்'' என்றார்.
÷அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் நூலகங்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களாக பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு காரணமாக சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திóட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பெரும்பாலானவை பலமாதங்களாக திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன. இதனால் இந்நூலகங்களில் வேலையில்லாத உள்ளூர் இளைஞர்ளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
÷பொது நூலகத் துறை அமைக்கப்பட்டுள்ள ஊர்ப்புற நூலகங்கள் இருக்கும் கிராமங்களில் நூலகங்கள் அமைப்பது, அத்துடன் நூலகப் பொறுப்பாளர் இல்லாததன் காரணமாக கட்டி முடிக்கப்பட்ட பல மாதங்கள் ஆகியும் அவை மூடியே கிடப்பது போன்ற காரணங்களால் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியில் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பயன் அளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.