திருவள்ளூர்

மணல் கடத்தல்: 2 டிராக்டர்கள் பறிமுதல்

DIN

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் எல்லைக்கு உள்பட்ட கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், வெங்கல் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, 2 டிராக்டர்களில் மணலை ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் போலீஸாரை கண்டதும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து இரு டிராக்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து, டிராக்டரின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT