திருவள்ளூர்

மான்கறி பறிமுதல்: இளைஞர் கைது

DIN

திருத்தணி அருகே மான் கறி வாங்கி வந்தவரை வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருத்தணி - நாகலாபுரம் கூட்டுச் சாலையில் கையில், பிளாஸ்டிக் கவருடன் நடந்து சென்றவரை சந்தேகத்தின் பேரில், வனத்துறையினர் மடக்கினர். அப்போது, அந்த நபர் தப்பி ஓட முயன்றார். இருப்பினும் அவரை வனத்துறையினர் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில், ஒரு கிலோ மான்கறி இருந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்டவர் திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன்(38) என்பதும், சித்தூரில் மான்கறி வாங்கி வந்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, முருகனை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT