கும்மிடிப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதர்பாக்கத்தை அடுத்த நேமள்ளூர் ஊராட்சிக்கு உள்பட்ட என்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் முனிவேல் (60). தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் புதன்கிழமை இரவு காற்றோட்டத்துக்காக முனிவேல், வீட்டின் கதவை திறந்து வைத்து, தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது, அறையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த நகைகள் திருடு போனது கண்டு முனிவேல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.