திருவள்ளூர்

பள்ளி, கல்லூரிகளில் சிலம்பத்தை கட்டாயமாக்கக் கோரிக்கை

DIN

சிலம்பத்தை அழிவிலிருந்து காக்க பள்ளி, கல்லூரிகளில் அதனை கட்டாயமாக்க வேண்டும் என சிலம்ப விளையாட்டு சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
மாதவரத்தை அடுத்த கொளத்தூரில் சிலம்பம் விளையாட்டு சங்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம் மாவட்டங்களுக்கான சிலம்ப விளையாட்டு சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர், வடமாவட்ட தொழில்நுட்ப கலந்தாய்வுக் கூட்டம், போட்டி விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். புரவலர் ரமேஷ் பாபு வரவேற்றார். தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கத் தலைவர் பா.சந்திரமோகன், செயல் தலைவர் பொன்.ராமர், பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பாரம்பரியமான சிலம்பம் விளையாட்டு, அழியாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் சிலம்பம் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் இதனை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவில், திருவள்ளூர் மாவட்ட சிலம்ப சங்கத் தலைவர் ஜெயராமன், நடிகர் தனுஷ்நம்பியார், நடிகர் ரங்கதுரை, காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தூயமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT