திருவள்ளூர்

10-ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழை பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.எம்.ராமலட்சுமி வியாழக்கிழமை வழங்கினார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 19-ஆம் தேதி வெளியானது. மாணவ - மாணவிகள் வசதிக்காக கல்வித்துறை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 25-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை எம்.எம்.ராமலட்சுமி மாணவிகளுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமையும் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இவை 90 நாள்கள் வரை செல்லுபடியாகும்.
நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்க அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT