திருவள்ளூர்

சிறுமிக்கு திருமணம்: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

பொன்னேரியில் சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

DIN

பொன்னேரியில் சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல்
கிடைத்தது. 
இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், பொன்னேரி வட்டாட்சியர் சுமதி, துணை வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய்த்துறை அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
இதில், மணப்பெண்ணுக்கு 16 வயது என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என அவரது பெற்றோரிடம் வருவாய்த்துறையினர் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திருமணத்தை கைவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT