திருவள்ளூர்

அனல் மின் நிலையத்தில் ரூ. 2.75 கோடி உதிரிபாகங்கள் திருட்டு

DIN

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 3 அலகுகளில், மொத்தம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் இருந்த,  மின் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் திருடு போனது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அனல் மின் நிலைய கிடங்கு மேலாளர் மல்லிகாஅர்ஜுனா, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
24 மணி நேரமும்,  மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் இருக்கும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் எவ்வாறு திருடுபோனது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT