முகப்பு
திருவள்ளூர்

கொசஸ்தலை ஆற்றில் நீர் திருட்டு: 6 மின் மோட்டார்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சியதாக 6 மின் மோட்டார்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சியதாக 6 மின் மோட்டார்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி, திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொசஸ்தலை ஆற்றில் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →