திருவள்ளூர்

வாகனத் திருட்டு: 2 பேர் கைது

DIN

திருத்தணி அருகே, இருசக்கர வாகனங்களைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கடந்த 6 மாதத்தில் 207 இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசந்திரன், உதவி ஆய்வாளர் சுரேந்தர் உள்ளிட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள் வாகனத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், செஞ்சிபனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  இவர்கள் சூர்யா(18),  அரக்கோணம் நாகாலம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (22) என்பதும் தெரியவந்தது. 5 இரு சக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய ஜான் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT