சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்
சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மாதவரம் காவல் நிலையம் சார்பில் மூலக்கடை - மாதவரம் சாலை சந்திப்பில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, மாதவரம் மற்றும் மூலக்கடை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினர் அப்பகுதியில் விநியோகம் செய்தனர். இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மாதவரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.