திருவள்ளூர்

காவல்துறை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

DIN

திருவள்ளூரில் காவல் துறையும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய காவல் துறை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட காவல் துறையும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவமுகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார். 
இந்த முகாமில் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த பல்வேறு பிரிவு சிறப்பு மருத்துவர்கள்,  காவல் துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளித்தனர். இதில், நோய் கண்டறிந்தோருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பிலான சிகிச்சையும் அளிக்கப்படவுள்ளது. 
இந்த முகாமில் துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன்(திருவள்ளூர்), சேகர்(திருத்தணி), பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் முதல் நாளில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT