முகப்பு
திருவள்ளூர்

ஏடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டால் பரபரப்பு

குடியாத்தம் நகரில் வங்கி ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

குடியாத்தம் நகரில் வங்கி ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம், நெல்லூர்பேட்டை, பேர்ணாம்பட்டு சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (65). ஓய்வுபெற்ற நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஊழியரான இவர், செவ்வாய்க்கிழமை மதியம் ஜிபிஎம் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துள்ளார். 
அப்போது பணத்துடன் ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஜெயக்குமார் நடுப்பேட்டையில் உள்ள வங்கி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரையும், கள்ள நோட்டையும் பெற்றுக் கொண்ட வங்கி அலுவலர்கள் அவற்றை சென்னைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →