திருவள்ளூர்

திருவள்ளூரின் ஒரு பகுதி சென்னை மாவட்டத்துடன் இணைப்பு : அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு

DIN

திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி சென்னை மாவட்டத்துடன் சேர்க்கப்பட உள்ள நிலையில், சென்னை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து நிலை பணியாளர்கள், சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வருவாய்க் கோட்டத்தைச் சேர்ந்த திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை எண்: 01, நாள்: 04.01.2018 அன்று அறிவிக்கப்பட்டது. 
இதன் தொடர்ச்சியாக, விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிய விரும்பும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், அது தொடர்பான விருப்ப மனுவினை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆட்சியர் பேசியது: சென்னை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிய விரும்பும் பணியாளர்கள் தங்களது விருப்பக் கடிதத்தினை, அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை, வரும் 28-ஆம் தேதிக்குள் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலரான ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) நேரில் அளிக்கலாம் என கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT