முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

அம்பத்தூர் அருகே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அம்பத்தூர் அருகே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். 
மேற்கு முகப்பேரை அடுத்துள்ள நொளம்பூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த செல்லாராம் (19) வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குழாயில் தண்ணீர் வராததால் மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது செல்லாராம் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட மற்ற பணியாளர்கள் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, செல்லாராமை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துபோனதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நொளம்பூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →