திருவள்ளூர்

வேளாண்மை அலுவலர்களுக்குப் பயிற்சி

DIN


திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்ற புதிதாக நியமனம் செய்யப்பட்ட வேளாண் துறை அலுவலர்களுக்கு உர மாதிரிகளை எவ்வாறு சேகரிப்பது என்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் துறையில் 17 இடங்களில் புதிதாக வேளாண் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேளாண் துறை சார்ந்த பணிகள் தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பயிற்சி முகாம் திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வேளாண் துறை இணை இயக்குநர் பாண்டியன் தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பிரதாப்ராவ் முன்னிலை வகித்தனர். 
இதில், சென்னை மத்திய உரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் உதவி இயக்குநர் மாதவன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு, உர ஆய்வாளரின் பணிகள், உர மாதிரி சேகரிப்பு மற்றும் தரமற்ற உரங்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாக விளக்கமாகப் பயிற்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) மற்றும் மூத்த வேளாண்மை அலுவலர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்ட வேளாண் அலுவலர்களுக்கு உர மாதிரிகள் எடுப்பது தொடர்பாகவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 
பயிற்சி முடிந்த பின் வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரேவதி மற்றும் பிரசாத் ஆகியோரால் உர ஆய்வாளர்கள் என்ற சான்றிதழ் புதிதாக நியமனம் செய்தோருக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT