திருவள்ளூர்

திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

DIN

திருவள்ளூர் அருகே திரெளபதியம்மன் சமேத தர்மராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை  தீமிதித் திருவிழா நடைபெற்றது. 
திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தீ மிதித் திருவிழா 10 நாள்கள் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 9-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது. 
இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் கடும் விரதம் இருந்தவர்கள் ஒவ்வொருவராக திருக்கோயில் வளாகத்தில் தீ மிதித்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, இரவில் திரௌபதியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT