திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் திருட்டு

மீஞ்சூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன்  நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

DIN


மீஞ்சூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன்  நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
 மீஞ்சூர் ராஜம்மாள் நகரில் வசிப்பவர் பாலகங்காதரன் (66). இவரது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இரு நாள்களுக்கு முன் வந்தவாசி சென்றுவிட்டு, திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பினார். 
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  
 இதுகுறித்த புகாரின் பேரில், மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT