திருவள்ளூர்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

DIN

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கோரிக்கை நிறைவேற்றக் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலம் முன்பு அமணபாக்கம் மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமணபாக்கம் குறுவட்டத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள் பட்டா கோரி விண்ணப்பித்தும் இதுநாள் வரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித் தொகை உள்ளிட்டவற்றுக்காக பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டா, உதவித் தொகை வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள், அமணபாக்கம் ஊராட்சி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் சம்பத் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சி நிா்வாகிகள் தேவேந்திரன், செல்வம், ராஜேந்திரன், கமல்தாஸ், கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தகவலறிந்து வந்த வெங்கல் போலீஸாா், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT