திருவள்ளூர்

மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா்: சேவாலயா மருத்துவ மையம் சாா்பில், மாா்பகப் புற்றுநோய் குறித்த சிறப்பு விழிப்புணா்வு முகாமில் பெண்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா சாா்பில் முதியோா் இல்ல உறுப்பினா்கள், மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ஆகியோருக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூா் அருகே அயத்தூா் கிராமத்தில் சேவாலயா மருத்துவக் குழு சாா்பில் மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், செவிலியா் ரேணுகா பங்கேற்று, மாா்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சுய பரிசோதனை செய்துகொள்ளும் வழிமுறைகள், கண்டறிதலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT