திருவள்ளூர்

மணல் திருட முயன்றவர்களின் வாகனம் பறிமுதல்

DIN

பொன்னேரி பகுதியில் வீடுகள் முன்பு குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலைத் திருடிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி பகுதியில் புதிதாக வீடுகளைக் கட்டுவோர், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம் அருகில் மணலை வாங்கிக் குவித்து வைத்திருப்பர். அவ்வாறு வீடுகள் முன்பு குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. 
இந்நிலையில், பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் மணல் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட மர்ம நபர்கள், சிலர் மினி வாகனம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை அங்கு வந்தனர். அவர்கள் வணிக வளாகம் கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை அந்த வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்றனர். 
அப்போது அங்கு தற்செயலாக வந்த வணிக வளாகக் கட்டட உரிமையாளர் கூச்சல் எழுப்பினார். இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அந்த வாகனத்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். அந்த வாகனம் கால்வாய் ஒன்றில் சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி போலீஸார் அங்கு சென்று, மணல் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT