திருவள்ளூர்

மண்டல அலுவலர்களுக்கு மக்களவைத் தேர்தல் பயிற்சி

DIN


திருவள்ளுர் மாவட்டத்தில், வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்  நடந்த முகாமுக்கு வருவாய் அலுவலர் து.சந்திரன் தலைமை வகித்தார். இதில், மக்களவை தேர்தல் நாளன்று மண்டல அலுவலர்கள் வாக்குச் சாவடிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். வாக்குப் பதிவின் போது இயக்குதல் மற்றும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மண்டல அலுவலர்களான தேர்தல் துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட மண்டல அலுவலர்கள் 118 பேர் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), வருவாய் கோட்டாட்சியர் (அம்பத்தூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் (திருவள்ளுர்), வட்டாட்சியர்கள் (திருவள்ளுர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.                                                            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT