திருவள்ளூர்

"மக்கள் குறைதீர் கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்'

DIN

மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் இதில் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். தற்போது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளன.
இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்து, நடத்தை விதிமுறைகள் பின் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT