திருவள்ளூர்

கங்கையம்மன் ஜாத்திரை விழா

DIN

திருத்தணி அருகே முருகூரில் உள்ள கங்கையம்மன் கோயில் ஜாத்திரை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
திருத்தணி நகராட்சி, 21-ஆவது வார்டில் அமைந்துள்ள முருகூர் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 இரவு களிமண்ணால் செய்யப்பட்ட உற்சவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெற்றன.  விழாவையொட்டி, முருகூர் முழுவதும் வண்ண விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT