திருவள்ளூர்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டு கடன் வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆவின் தலைவர் த.சந்திரன் தலைமை வகித்தார். பால்வள துணைப் பதிவாளர் ஆர்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொது மேலாளர் பி.ராமநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் கறவை மாடு வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் விண்ணப்பம் அளித்தனர்.  பல்வேறு வங்கிகளின் கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர். ஆவின் திட்ட மேலாளர் உமாசங்கர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT