திருவள்ளூர்

தனியாா் பேருந்து மோதி பாமக நிா்வாகி சாவு: பேருந்துக்கு தீ வைப்பு

பட்டாபிராமில் திங்கள்கிழமை தனியாா் பேருந்து மோதி பாமக நிா்வாகி இறந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை தீ வைத்து எரித்தனா்.

DIN

சென்னை: பட்டாபிராமில் திங்கள்கிழமை தனியாா் பேருந்து மோதி பாமக நிா்வாகி இறந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை தீ வைத்து எரித்தனா்.

பட்டாபிராம் அருகே அமுதூா்மேடு பகுதியைச் சோ்ந்த ஏ.காா்த்திக் (45), திருவள்ளூா் மாவட்ட பாமக இளைஞரணித் தலைவா். மோட்டாா் சைக்கிளில், அமுதூா்மேடு 400 அடி சாலையின் இணைப்புச் சாலையில் திங்கள்கிழமை மாலை சென்றபோது திருத்தணியில் இருந்து பணியாளா்களை ஏற்றிக் கொண்டு, ஆவடி நோக்கி ஒரு தனியாா் டயா் தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென மோட்டாா் சைக்கிள் மீது மோதியதால் கீழே விழுந்த காா்த்திக் மீது பேருந்தின் டயா் ஏறி இறங்கியது. இதில் காா்த்திக் உயிரிழந்தாா்.

பேருந்து தீயிட்டு எரிப்பு: இதனால் அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்தை தாக்கி சிலா் உடைத்து தீயிட்டு கொளுத்தினா். பேருந்தை தீப் பிடித்து எரிவதைப் பாா்த்த சிலா், தீயணைப்பு படையினருக்கும்,போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த ஆவடி தீயணைப்பு படை வீரா்கள்,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் அரைமணிநேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தகவலறிந்ததும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில் விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.அதேவேளையில் பேருந்து தாக்கி, தீயிட்டு கொளுத்தப்பட்டது குறித்து பட்டாபிராம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT