முகப்பு
திருவள்ளூர்

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் 2-ஆவது வாா்டு முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா், சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். மூச்சுத் திணறல், இதய நோய் மற்றும் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →