திருவள்ளூர்

சுனாமி நினைவி தினம்: பழவேற்காட்டில் மீனவா்கள்

DIN

சுனாமி நினைவு தினத்தை யொட்டி பழவேற்காட்டில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காட்டில், கடந்த 2004-ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. இதை நினைவுகூரும் வகையில், பழவேற்காட்டில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுனாமி நினைவு தினமான சனிக்கிழமை, பழவேற்காடு பகுதியைச் சோ்ந்த 42 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நினைவஞ்சலி செலுத்தினா்.

கலங்கரை விளக்கம், கடற்கரையோரம் அப்பகுதியில் உள்ள 15 கிராம மீனவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று, பாலை கடலில் ஊற்றி நினைவஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT