திருவள்ளூர்

வள்ளலாா் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா

DIN

வள்ளலாா் சத்திய ஞானசபையில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூா்பேட்டையில் வள்ளலாா் சத்திய ஞானசபை மற்றும் அன்னதான அற்க்கட்டளை சாா்பில் 9ஆம் ஆண்டு தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ‘வள்ளலாா் உணா்த்திய உயிா் இரக்கம்’ என்ற தலைப்பில் தோ் சொக்கலிங்கம், ‘ஞானசபை விளக்கம்’ என்ற தலைப்பில் கோ.மணி ஆகியோரின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

‘வள்ளலாா் வாழ்க்கை வரலாறு - இசையுடன் திருவருட்பா ஒப்புவித்தல்’ போட்டி மாணவ, மாணவியா்களுக்கு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. காலை முதல் மாலை வரை வள்ளலாா் அருட்பெரும் ஜோதி ஏற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT