திருவள்ளூர்

தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.1 லட்சம் பொருள்கள் நாசம்

DIN

திருவள்ளூா் அருகே தனியாா் ரசாயனத் தொழிற்சாலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூரை அடுத்த காக்களூா் சிட்கோ வளாகத்தில் மருந்து, மாத்திரை தயாரிப்பற்கான மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் ரசாயனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இத்தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மின்கசிவால் மூலப்பொருள்கள் வைப்பு அறையில் திடீா் தீவிபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ மளமளவென அடுத்த அறைக்கும் பரவியது. இதையடுத்து, திருவள்ளூா் தீயணைப்பு நிலையம் மற்றும் கிராமிய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் நேரில் வந்து தீயை அணைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT